தலைக்கு ரூ.1 கோடி.. நக்சல் தலைவர்.. சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

By
On:
Follow Us

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 நக்சலைட்டுகளில், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படிருந்த ராம் என்கிற சல்பதியும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சல் அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது.

சத்தீஸ்கர் – ஒடிஸா எல்லையில் காரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறையினருடன் சிஆர்பிஎஃப், ஒடிசா சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அதிரடிப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இதில் இருக்கும் இடம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மத்திய நக்சல்கள் குழு உறுப்பினரான ஜெயராம் உள்பட 14 -க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாக காரியாபந்த் காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் போன்ற தானியங்கி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements