ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. விசித்திரமான திருட்டு சம்பவம்!

By
On:
Follow Us

Last Updated:

ஃபரிதாபாத்தின் தௌலதாபாத்தில் வசிக்கும் ரஞ்சித் மண்டல், பெண்களின் தலையில் இருந்து பழைய முடி

News18

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வைரங்கள், தங்க நகைகள் அல்லது விலையுயர்ந்த பொருட்களையோ அல்ல. வீட்டில் இருந்த தலைமுடியை திருடர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். ஆனால் அதன் சந்தை மதிப்பானது விலை உயர்ந்த நகைகளுக்கு சமம் என்றாலும். இப்படிப்பட்ட வினோதமான திருட்டு சம்பவத்தை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திருட்டு வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ தலைமுடி உள்ளிட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. தலைமுடியின் மதிப்பை அறிந்து போலீசாரும் ஆச்சரியமடைந்தனர். தான் விக் தயாரிக்கும் தொழில் இருப்பதாகவும், வேலைக்காக சேகரித்து வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடர்கள் திருடிச் சென்றதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இதுதவிர ரூ.2 லட்சம் ரொக்கமும் திருடப்பட்டது. ஜனவரி 14ம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை இந்த திருட்டு நடந்துள்ளது.

தகவலின்படி, ஃபரிதாபாத்தின் தௌலதாபாத்தில் வசிக்கும் ரஞ்சித் மண்டல், பெண்களின் தலையில் இருந்து பழைய முடியை வாங்கிக் கொண்டு வந்து, தனது வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாலை 2 – 3 மணியளவில், படிக்கட்டுகளின் வழியாக திருடர்கள் தனது வீட்டிற்குள் நுழைந்ததாக ரஞ்சித் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்தார். அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த சுமார் 150 கிலோ தலைமுடியை திருடிச் சென்றனர். அதன் விலை சுமார் ரூ.7 லட்சம் என ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் தனது வீட்டில் பையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் பணத்தையும் திருடர்கள் திருடிச் சென்றதாகவும் புகாரில் தெரிவித்தார்.

இந்த திருட்டு சம்பவம் ரஞ்சீத்துக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து ரஞ்சித் கூறியதாவது, பெண்களின் தலையில் இருந்து பழைய முடியை வாங்கி, வீட்டில் சேகரித்து, அதனை விக் செய்து வருவதாகவும், அந்த விக்-கை வெளியில் விற்றால் தனக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் நடந்தபோது அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்த முழு சம்பவமும் அக்கம் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் சுமார் மூன்று முதல் நான்கு திருடர்கள் திருட வந்திருந்தனர். இதனையடுத்து இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்.. விசித்திரமான திருட்டு சம்பவம்!

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements