பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாகக் கூறப்படும் நபர் மும்பை தானேவில் வைத்து கைது செய்தனர். சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வதவல்லி என்ற இடத்தில் அந்த நபர் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள புதர்களுக்குள் அவர் பதுங்கி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், 30 வயதான அந்த நபர் விஜய் தாஸ் என்ற பெயருடன், தானேவில் உள்ள பாரில் ஊழியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நபர் 5 மாதங்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்திருக்கிறார். மும்பைக்கு வந்தவுடன் தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றிச் செய்யும் இடத்திலும், பிஜாய் தாஸ், முகமது இலியாஸ் என மற்ற இடங்களிலும் கூறி வந்துள்ளார்.
பிடிபட்ட நபர் தன்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் வசித்து வந்த இடத்தில் நடத்திய சோதனையில் இந்தியர் என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பிடிபட்ட நபர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும், அவரது உண்மையான பெயர் முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும் ((Mohammad Shariful Islam Shahzad)) தெரியவந்தது. பார் மட்டுமின்றி ஹவுஸ் கீப்பிங் ஏஜென்சியிலும் அந்த நபர் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில், சைஃப் அலிகான் வீட்டில் திருட சென்றது ஏன் என்று கைதான முகமது ஷரிஃபுல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், “தனது தாயின் மருத்துவ செலவுக்காகவே திருடியதாக” வாக்குமூலம் அளித்துள்ளார். வங்கதேசத்தை சேர்ந்த இவர் மாத ஊதியமாக 13 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த நிலையில் அதில் 12 ஆயிரத்தை தாயின் மருத்துவ செலவுக்காக அனுப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏழ்மையின் காரணமாக பணக்கார வீட்டில் கொள்ளையடித்துவிட்டு வங்கதேசத்துக்கு தப்பி விடலாம் என திட்டமிட்டதாகவும், சைஃப் அலிகான் வீடு என்பது தெரியாமல் தான் அந்த வீட்டுக்குள் சென்றதாகவும் ஷரிஃபுல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Mumbai,Maharashtra
January 23, 2025 10:07 AM IST
Saif Ali Khan | தாய்க்கு நேர்ந்த சோகம்.. சைஃப் அலிகான் வீட்டில் திருட சென்றது இதற்காக தான்.. கைதான ஷரிஃபுல் பகீர் வாக்குமூலம்!