Last Updated:
சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு என்னுடைய மகனின் போட்டோக்களை ஊடகங்களில் பார்த்தேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை. எங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏதுமில்லை. எனது மகன் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய நபர் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பை வனப்பகுதியில் இருந்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சைஃப் அலிகான் கடந்த 16ஆம் தேதி மர்ம நபரால் தனது வீட்டில் தாக்கப்பட்டார். கத்தியால் பல இடங்களில் காயம் அடைந்த அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் . அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
பூரண குணமடைந்த பின்னர் நேற்று முன்தினம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் சைஃப் அலிகானை தாக்கியவர் யார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷரீபுல் இஸ்லாம் என்பவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். இவர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் திருடும் நோக்கத்தோடு உள்ளே நுழைந்துள்ளார். அவர் பிடிபட்ட போது சைஃப் அலிக்கானை அவர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சைஃப் அலிகானை தாக்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு ஷரிபுல் இஸ்லாம் அவருடைய தந்தை ரூகுல் அமினை போனில் அழைத்துள்ளார். அப்போது பத்தாயிரம் ரூபாய் டாக்கா கரன்சியை தந்தையின் அக்கவுண்டிற்கு மாற்றியதாக ஷரிபுல் இஸ்லாம் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து கைதாகி உள்ள ஷரிபுல் இஸ்லாமின் தந்தை ரூகுல் அமீன் கூறியதாவது-
நான் ஒரு சணல் நிறுவனத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறேன். சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு என்னுடைய மகனின் போட்டோக்களை ஊடகங்களில் பார்த்தேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை. எங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏதுமில்லை. எனது மகன் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க – எம்.பி.பி.எஸ். படிப்புக் கட்டணம் ‘இவ்வளவு’ தானா..? எந்த மருத்துவக் கல்லூரி..?
10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஷரிபுல் இஸ்லாம் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஏஜென்டின் உதவியுடன் இந்தியாவுக்குள் வந்துள்ளார். வேலைக்காக வந்த அவர் ஒரு சிறு கிராமத்தில் வியாபாரம் செய்து இருக்கிறார். ஓட்டல்களில் வேலை பார்த்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு பெற்றோர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
January 23, 2025 8:18 PM IST