வாடிக்கையாளர் அளித்த பணம் செலுத்தும் சீட்டில் இருந்த வாசகம்.. வங்கி மேலாளர் அதிர்ச்சி..

By
On:
Follow Us

Last Updated:

ராதிகா மேடம் உங்களை உலக எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உங்கள் ராசி அவ்வளவு சக்தி மிக்கது என்று ஒருவர் கூறியுள்ளார்.

News18

வங்கியில் பணம் செலுத்துவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் அதற்கான சீட்டை (Pay in Slip) பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த வங்கி மேலாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தற்போது இந்த வாடிக்கையாளரின் பணம் செலுத்தும் சீட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வங்கியில் பணத்தை எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ செல்லும்போது பல வாடிக்கையாளர்கள் அதனை சிரமமாக உணர்வார்கள். இதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும், அங்கு பணம் செலுத்துவதற்கான விண்ணப்ப படிவம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் சில நேரம் மாற்றமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

அவர்கள் பலமுறை பணம் செலுத்தும் அல்லது பெற்றுக் கொள்ளும் சீட்டில் தவறு செய்வதையும், அதனை வங்கி ஊழியர்கள் திருத்த சொல்வதையும் நாம் பார்க்க முடியும். அந்த வகையில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் செலுத்தும் சீட்டில் எழுதிய வாசகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் தேதியை 29 ஜனவரி 2025 என்று சீட்டில் பதிவிட்டுள்ளார். அதாவது அந்த தேதி இன்னும் வரவில்லை. ராதிகா சர்மா என்ற அந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் சீட்டில் தவறாக நிரப்பியுள்ளார். அவர் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்வதற்காக வங்கிக்கு வந்திருக்கிறார்.

பணம் செலுத்தும் சீட்டில், நான் என் கணவருடன் கும்பமேளாவுக்கு செல்ல வேண்டும்.என்னுடைய ராசி கும்பம் என்பது உள்ளிட்ட வாசகங்களை அவர் எழுதியுள்ளார். இந்த சீட்டை பார்த்த வங்கி மேலாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க – நாயை வைத்து ஒத்திகை.. மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த கணவன் – திடுக் தகவல்!

கிண்டலாக தற்போது இந்த வங்கி பணம் செலுத்தும் சீட்டு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதற்கு நகைச்சுவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ராதிகா மேடம் உங்களை உலக எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உங்கள் ராசி அவ்வளவு சக்தி மிக்கது என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர் இந்த சீட்டை படித்து விட்டு வங்கி மேலாளர் கோமாவில் இருப்பதாக கிண்டலாக கூறியுள்ளார்.



நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements