உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் பார்வையிடத் திட்டமிடும் மக்களுக்கு குஜராத் அரசு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. கடந்த 11 நாள்களில் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மகா கும்பமேளாவுக்குச் செல்ல சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது குஜராத் அரசு..
இதுதொடர்பாக உள்துறை மற்றும் போக்குவரத்துத் துணை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில்,
இந்த சுற்றுலாத் தொகுப்பின் கீழ், அகமதாபாத்தில் உள்ள ராணிப் பேருந்து பணிமனையிலிருந்து தினமும் காலை 7 மணிக்கு பிரயாக்ராஜுக்கு ஏசி வால்வோ பேருந்து புறப்படும்.
ஜனவரி 27-ஆம் தேதி காலை ராணிப் பணிமனையிலிருந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முதல் பேருந்தை கொடியசைத்துத் துவக்கிய பிறகு இந்த சேவை தொடங்கும்.
இந்து சனாதன தர்மத்தில் மகா கும்பமேளா சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.