கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் தன்னை அவதூறாக பேசியதாக கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை வந்தாா்.
இந்நிலையில் காவல் நிலையத்திலிருந்த ராஜா திடீரென தப்பிச் சென்றாா்.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் தலைமையிலான போலீஸாா் துரிதமாக தேடுதல் வேட்டையில் இறங்கி ராஜாவை கைது செய்தனா்.