மேற்குத் தொடா்ச்சி மலையில் களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடா்மழையால், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்து பாய்கிறது. வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மழையின்றி வெயில் நிலவியதால், வனத் துறையினா் சில கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதித்தனா்.
களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

For Feedback - sudalaikani@tamildiginews,com.