Courtallam Season Update | கோடையிலும் கொட்டும் குற்றாலம் அருவி… மகிழ்ச்சியில் தென்காசி மக்கள் – News18 தமிழ்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் தென்காசி ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும் இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் மேலும் ஆர்ப்பரித்து வரும் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

விளம்பரம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உத்தரவின் பேரில் அருவியில் குளிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

News18

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அனைத்து பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி ,ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.

விளம்பரம்

ALSO READ |  
ISRO Aditya-L1 | ‘சூரியன் குறித்த ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 செயற்கைகோள் முடியும் தருவாயில் உள்ளது’ – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

 தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் பிரதான அருவி குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து துவங்கியது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். மேலும் கோடை வெயிலில் அருவியில் தண்ணீர் விழுவதால் குளித்து மகிழ்ந்து செல்வதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குறைவாக நீர்வரத்து வரத்துவங்கி உள்ளது.

 

செய்தியாளர் : ச.செந்தில்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements