மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க : தீபாவளிக்கு முந்தைய நாள் பொது விடுமுறை! புதுச்சேரி அரசு
இரு கூட்டணியில் உள்ள கட்சிகளும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தாலும், சில தொகுதிகளில் யாருக்கு ஒதுக்குவது என்று கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மகா விகாஸ் அகாதியில் இடம்பெற்றுள்ள சரத் பவார் கூறியதாவது:
மகா விகாஸ் அகாதி கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 சதவிகித இடங்களில் ஒருமனதாக ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது. பிற தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைந் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். மக்களின் பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய ஆட்சியாளர்களால் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. நாங்கள் செய்வோம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.