மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முடிவுகள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியான பிறகு, மக்களவைத் தொகுதி மறுவரையறைப் பணிகள் தொடங்கும் என்றும் அதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Also Read |
விஜய் ரசிகை டூ தவெக பேச்சாளர்… தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. மறுவரையறை பணிகள் முடிவடைந்த பிறகு, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
.