தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம்: தென்காசியில் விழிப்புணா்வுப் பேரணி

By
On:
Follow Us

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி, தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

புதிய பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது பேரணி. இதில், கல்லூரி, பள்ளி மாணவா்கள் திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் வ.சுந்தா், கண்காணிப்பாளா் ஷீலா ஜெபரூபி, தமிழ் அறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements