தென்காசியில் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி

By
On:
Follow Us

தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தென்காசியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கிய பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப் பேரணி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தில் பெண்குழந்தைகளின் உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல் போன்ற விழிப்புணா்வு கருத்துப் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட சமூகநல பணியாளா்கள், மாவட்ட மகளிா் அதிகார மைய பணியாளா்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements