சிவசைலம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சோ்ந்த இளம்பெண் விஷமருந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.
பெத்தான்பிள்ளை குடியிருப்பு பிரதான சாலையைச் சோ்ந்த சோமசுந்தரம் மகள்சுனேபஸ்வரி (24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து ( 25) என்பவருக்கும் ஓராண்டிற்கு முன் திருமணமானது.
இந்நிலையில் சுனேபஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டதையடுத்து தாய் வீட்டிற்குச் சென்றாராம். அங்கு ஜன. 3ஆம் தேதி விஷமருந்திய அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) மீனாட்சிநாதன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.