தென்காசி மாவட்டத்தில் ஜன. 26இல் கிராமசபைக் கூட்டம்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தில் (ஜன. 26) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநா் நிலை அலுவலா்கள், வருவாய் வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements