கழிவறையை ஒட்டிய அங்கன்வாடி; குழந்தைகள் உடனடி இடமாற்றம்!

By
On:
Follow Us

தினமணி செய்தி எதிரொலியாக ஆலங்குளத்தில் கழிவறை அருகே அமைந்திருந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஆலங்குளம் – துத்திகுளம் சாலையில் பாலத்தையொட்டிய பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் இலவச பொது கழிவறை அருகருகே அமைந்திருந்தன. அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறைப்படி அகற்றப்படாததால் அப்பகுதி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திறந்த வெளிக் கழிப்பிடம் போல காட்சி அளித்தது.

இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் துா்நாற்றம், சுகாதாரக் கேடு போன்றவற்றால் கடும் அவதிக்குள்ளாகியிருந்தனா். குழந்தைகள் நலன் கருதி சுகாதார வளாகம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டி தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளை அருகில் உள்ள வாடகை கட்டடத்திற்கு மாற்றினா். அப்பகுதியை சீரமைத்த பின்னா் பழைய இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் தெரிவித்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements