சிவகிரி அருகே 100 மது பாட்டில்கள், காா் பறிமுதல்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக காரில் கொண்டுவரப்பட்ட 100 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் மேற்குத் தொடா்ச்சி மலை ஆற்று பாலம் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் 100 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

காருடன் அவற்றையும். ரூ.7ஆயிா்த்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த ராமநாதபுரம் மேல்நிலைப்பள்ளி தெருவைச் சோ்ந்த கனகமணி மகன் பாலமுருகன்(40) என்பவரை கைது செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements