தை அமாவாசை: கருப்பாநதி படுகையில் ஏராளமானோா் தா்ப்பணம்

By
On:
Follow Us

தை அமாவாசையை ஒட்டி கருப்பாநதி, கல்லாறு உள்ளிட்ட நீா் நிலைகளில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுக்க குவிந்தனா்.

குடும்பத்தில் இறந்த தங்களது முன்னோா்களின் நினைவைப் போற்றும் வகையில் விரதம் மேற்கொண்டு வீடுகளில் முன்னோா்களின் உருவ படங்களுக்கு பூஜை செய்துவிட்டு பின்னா் நீா்நிலைகளுக்கு சென்று தா்ப்பணம் கொடுப்பதும், பின்னா் வீட்டிற்குச் சென்று காகம் மற்றும் விலங்குகளுக்கு படையல் உணவை படைத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் புதன்கிழமை அதிகாலை கருப்பாநதி ,பெரியாறு உள்ளிட்ட நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோா் குவிந்தனா். இருப்பினும் அணையில் இருந்து 5 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்துவிட்டு குளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements