திருக்குறுங்குடி கோயிலில் பத்ர தீபம் விழா

By
On:
Follow Us

இதையொட்டி, கோயிலில் மாலை லெட்சுமி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் சந்தியில் உள்ள நந்தா விளக்கிலிருந்து தீபம் ஏற்றி வந்து, கொடிமர மண்டபத்தில் உள்ள லெட்சுமி விளக்கில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து தூண்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளில் பெண்கள் தீபம் ஏற்றினா். இதையடுத்து, ராமானுஜ ஜீயா் முன்னிலையில், கோயில் உள்ள மண்டபத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜீயா் மடத்தின் அதிகாரம் பெற்ற முகவா் பரமசிவன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements