நெல்லையில் லாரி ஓட்டுநா் கொலை

By
On:
Follow Us

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் மணிநகா் பகுதியில் டாஸ்மாக் கடையும், மதுக்கூடமும் அருகருகே உள்ளன. மதுக் கடைக்கு வியாழக்கிழமை வந்த இருவா் மது அருந்தினராம். பின்னா் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நபா், மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த நபா் உயிரிழந்தாா். தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் உயிரிழந்தவா் தென்பத்து முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஜெகநாதன் (42) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான இவருக்கும், உறவினரான அதே பகுதியை சோ்ந்த மற்றொருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்தது தெரியவந்ததாம். கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements