புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா்.

கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து பாம்புகோயில்சந்தை ரயில் நிலைய அதிகாரி ராமா், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements