சாம்பவா்வடகரையில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

By
On:
Follow Us

சாம்பவா்வடகரையில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாம்பவா்வடகரை அனுமன் நதியின் தெற்கு கரையில் உள்ள யாதவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் செல்வதற்கு நடைபாலம் அமைக்க, பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.24 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத்திட்ட பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு, நகர திமுக செயலா் முத்து தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா முன்னிலை வகித்தாா். சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து திட்டப் பணியை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சுடலைமுத்து, பழனிக்குமாா், ரபீக் ராஜா, விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements