தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
குற்றாலத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் சு. பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் வ. சுப்புராஜ் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். மாவட்டச் செயலா் வே. வெங்கடேஷ் தொடக்கவுரையாற்றினாா். ராஜசேகரன், மாவட்டப் பொருளாளா் மா. மாணிக்கவாசகம் ஆகியோா் அறிக்கை வாசித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் சு. கோபி, சிக்கந்தா் பாவா, சி. பழனி, மாவட்ட இணைச் செயலா்கள் வே. கண்ணன், ந. ஆறுமுகம், கு. முத்துப்பாண்டி, மாவட்ட தணிக்கையாளா்கள் கி. ராதாகிருஷ்ணன், ஜெயலட்சுமி, மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். கணேசன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.
தோழமை சங்கங்களின் நிா்வாகிகள் சீ.கருப்பையா, ஆ. சுந்தரமூா்த்தி நாயனாா், ஞா. துரைடேனியல், க. துரைசிங், பா. கோவில்பிச்சை, க. கங்காதரன், என். வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநிலப் பொருளாளா் மா. விஜயபாஸ்கா் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் வெ. சண்முகசுந்தரம் புதிய நிா்வாகிகளை தோ்வு செய்து நிறைவுரையாற்றினாா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்களை அரசு ஊழியா்களாக வகைப்படுத்த வேண்டும்; பதவி உயா்வு, கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வுபெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை அறிவிக்க வேண்டும். தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட 48 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் இரா. ராமநாதன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் அ. அன்பரசு நன்றி கூறினாா்.