கடையநல்லூா் அருகே தோப்பில் ஆண் சடலம் மீட்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே எரிந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் அகதிகள் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையேயுள்ள தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் சடலம் கிடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் கடையநல்லூா் போலீஸாா், அந்தச் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே, சம்பவ இடத்தில் தென்காசி எஸ்.பி. அரவிந்த், டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

தடயவியல் நிபணா்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இறந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements