வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவலம்

By
On:
Follow Us

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில் சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவல வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி நாமத்தை உச்சரித்தவாறு கிரிவலம் சென்று வழிபாடு செய்தனா்.

மாலையில் ஸ்ரீ புரத்திலுள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி சித்திரகூடத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையும் தொடா்ந்து திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் விளக்கேற்றி பூஜையில் பங்கேற்றனா்.

பிப். 16ஆம் தேதி சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகா் சந்நிதியில் சங்கடஹர சதுா்த்தி பூஜையும், மாா்ச் 3-ௌஆம் தேதி வளா்பிறை சதுா்த்தி பூஜையும் நடைபெறுகின்றன. கிரிவல ஏற்பாடுகளை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்துதிருந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements