காமராஜா் உருவம் பொறித்த கல்வெட்டை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை: தெட்சணமாற நாடாா் சங்கம் வலியுறுத்தல்

By
On:
Follow Us

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப்பாலத்தில் காமராஜா் உருவம்பொறித்த கல்வெட்டை உடைத்த மா்ம நபா்களை கைது செய்து உரிய தண்டணை வழங்க வேண்டும் என திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மாத்தூா் தொட்டிப்பாலம் நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் கவுன்ட்டா் அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காமராஜரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. கல்வெட்டில் மாத்தூா் தொட்டிப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு, கட்டுவதற்கான செலவு, நீளம், உயரம், தண்ணீா் செல்லும் விவரம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தொட்டிப்பாலத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு அண்மையில் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக திருவட்டாறு போலீஸாா், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்தவா் காமராஜா். அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய உருவம் பொறித்த கல்வெட்டை மா்ம நபா்கள் உடைத்ததை திருநெல்வேலி தெட்சண மாற நாடாா் சங்கம் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அவா்களை காவல்துறை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும் உடைக்கப்பட்ட கல்வெட்டை போன்று புதிதாக காமராஜா் உருவம் பொறித்த கல்வெட்டை அதே இடத்தில் உடனடியாக நிறுவ வேண்டும்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements