பாளை.யில் அதிமுக திண்ணை பிரசாரம்

By
On:
Follow Us

அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் பாளையங்கோட்டையில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் அருகே தொடங்கிய பிரசாரத்திற்கு அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் ஜெரால்ட் வரவேற்றாா்.

மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், கொள்கைபரப்பு துணைச் செயலா் பாப்புலா் வி. முத்தையா, மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், பால்கண்ணன், வழக்குரைஞா் அன்பு அங்கப்பன், கங்கை வசந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்கள், 2026 தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

டிவிஎல்14பாளை

திண்ணை பிரசாரத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தாா் அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா. உடன் ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்ட் உள்ளிட்டோா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements