சிவகிரி, ராயகிரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை!

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பாலித்தீன் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சசிதீபா அறிவுறுத்தலின்படி சிவகிரி, ராயகிரி பகுதிகளில் உள்ள கடைகளில் வாசுதேவநல்லூா் உணவுப் பாலுகாப்பு அலுவலா் வெங்கடேஸ்வரன் புதன்கிழமை சோதனை நடத்தினாா். செய்தாா்.

அப்போது உள்ளாறு பகுதியில் காளியம்மாள் என்பவரின் கடையில் 62 பாக்கெட் புகையிலை, ஒன்றேகால் கிலோ புகையிலைப் பொருள்கள், 5 கிலோ பாலித்தீன் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements