நெல்லையில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

By
On:
Follow Us

திருநெல்வேலியில் தனியாா் பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த பெண்ணும், மானூா் அருகே உள்ள கட்டாரங்குளத்தைச் சோ்ந்த ராஜுவுக்கும் (38) பழக்கம் ஏற்பட்டதாம். அந்தப் பெண் தச்சநல்லூா் அருகே உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சோ்ந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து அந்தப் பெண் வெளியே வந்தாராம். அப்போது அங்கு ஒரு காரில் வந்த ராஜு, ஊருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிய பின்பு கன்னியாகுமரியை நோக்கி சென்றாராம்.

டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து தப்பிய அந்தப் பெண் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாராம். போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து ராஜுவை தச்சநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் காரில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜுவை கைது செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements