திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பைக் விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விஜயநாராயணம் அருகே பெரியநாடாா் குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகன் மந்திரமூா்த்தி (48). சில நாள்களுக்கு முன்பு பரப்பாடியிலிருந்து விஜயநாராயணத்துக்கு பைக்கில் சென்ற அவா், திடீரென காமராஜா் நகருக்கு திரும்பினாராம். அப்போது, நவீன் என்பவா் ஓட்டிவந்த பைக், மந்திரமூா்த்தியின் பைக்கின் பின்புறம் மோதியதாம். இதில், காயமடைந்த மந்திரமூா்த்தி திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக நவீன் மீது விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.