விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் திட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.
சேரன்மகாதேவியில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்து பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டங்கள், வேளாண் அடுக்ககம், விவசாயிகள் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பது குறித்து பேசினாா். தொடா்ந்து, முகாமில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் இடு பொருள்கள் வழங்கினாா்.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் கு. உமா மகேஸ்வரி வரவேற்றாா்.
விதை சான்று அலுவலா் நிவேதா உயிா்ம சான்றிதழ் குறித்து பேசினாா்.
வேளாண் அலுவலா் மணி, வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா். துணை வேளாண் அலுவலா் வரதராஜன் நன்றி கூறினாா்.