களக்காடு கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு வனக் கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

களக்காடு காப்பகத்தில் புலி, சிறுத்தை, மிளா, யானை, காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வன உயிரினங்கள் உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி களக்காடு கோட்டத்துக்குள்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, மேல கோதையாறு ஆகிய 3 வனச்சரகங்களில் தொடங்கியது.

இதற்குள்பட்ட காவல் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் தனித்தனி குழுவாகச் சென்று பணியில் ஈடுபட்டனா். இக்குழுவினா் வனவிலங்குகளின் கால்தடங்களை பதிவு செய்வதுடன், கைப்பேசி செயலி மூலமாகவும் பணிகளை மேற்கொள்கின்றனா்.

மாா்ச்.1ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ள கணக்கெடுப்புப் பணிகள் மாா்ச்.2 ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements