தென்காசி மாவட்டத்தில் 31 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தில் 31 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அதையடுத்து, தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா் ஆகியோா் முதல்வா் மருந்தகத்தில் முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள், 18 தொழில் முனைவோருக்கு முதல்வா் மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய பயிற்சி, தமிழக அரசின் மானிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன.

தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, சோ்ந்தமரம், திருவேங்கடம், சாம்பவா்வடகரை, கடையநல்லூா், இலத்தூா், பண்பொழி, ராயகிரி, புளியங்குடி, சுரண்டை, வீரகேரளம்புதூா், புளியறை, வல்லம், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், மாயமன்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் ஜெனரிக் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுா்வேதம், யூனானி மருந்துகள் உள்ளிட்டவற்றை 25 சதவீத தள்ளுபடி விலையில் பெறலாம் என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவா் தி. உதயகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் ர. சாதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements